நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சியில் இருந்து ஆட்டோ ஒன்று இன்று காலை நாங்குநேரிக்கு பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. திடீரென சாலையின் குறுக்கே வந்த கரடியை பார்த்து ஓட்டுனர் கோமதி சத்தம் போட்டு விரட்டினார். தொடர்ந்து சிறிது தூரம் கரடி ஓடி சென்று அருகில் உள்ள புதிரில் மறைந்தது. இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் இருந்தாலும், பகலில் கரடி நடமாட்டம் என்பது அப்பகுதியில் இதுவே முதல்முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்