திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு புனித நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த ரமலான் முடிவடைய உள்ளது. இந்தநிலையில் பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மேலப்பாளையம் வாவர் ஜும்மா பள்ளிவாசலில் இன்று (மார்ச் 25) நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.