நெல்லை: புகையிலை பொருள் வைத்திருந்தவர் கைது
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தெற்கு கள்ளிகுளம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. எனவே ரமேஷை போலீசார் இன்று (நவம்பர் 12) கைது செய்தனர்.