கனடா, அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை குர்பெத்வந்த் சிங் பனு என்பவர் தொடங்கியுள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக வீடியோ வெளியிட்ட காலிஸ்தான் பயங்கரவாதி குர்பெத்வந்த் சிங் பனு இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான கடவுள் ராமர் கோவில் மீது வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.