நெல்லை மாவட்டம் மேலப்பாட்டத்தில் 17 வயது சிறுவனை நேற்று மர்ம கும்பல் கொலவெறியுடன் வீடு புகுந்து தாக்கியது. சிறுவனின் கழுத்து கால் பகுதியில் வெட்டு பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளான். இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.