நெல்லை பேட்டை மலையாள மேடு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் கூலி தொழில் ஆவார். இவருக்கு மருது கார்த்திக் என்பவருடன் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தெருவில் பரமசிவன் நின்றபோது அங்கு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென பரமசிவத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் துடிதுடித்து உயிரிழந்தார். பின் அக்கும்பல் தப்பி ஓடியது. பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.