நெல்லை மாநகராட்சியில் நெல்லை தச்சநல்லூர் பாளையங்கோட்டை உள்பட 4 மண்டலங்களில் மொத்தம் 573 தூய்மைப் பணியாளர்கள் சுய உதவிக்குழுவின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ. 480 வீதம் வழங்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து சுய உதவிக் குழுக்கள் மூலமே பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்கள் பெண்கள் உள்பட தூய்மைப் பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.