கன்னியாகுமரி: குளச்சலில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். “என் ஆட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இதற்கு மேலும் திமுகவிற்கும், பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் தான் ஓட்டு போடுவீர்கள் என்றால் என்னை தூக்கி சுடுகாட்டில் போடுங்கள். 2026-க்கு பிறகும் என்னை கத்துவதற்கு விட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.