ராமையன்பட்டி கழிவுநீர் நிலையத்தில் நீதிபதிகள் ஆய்வு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாமிநாதன் புகழேந்தி இருவரும் தற்போது நெல்லையில் தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர். மீனாட்சிபுரம் சிந்துப்பூந்துறை தாமிரபரணி ஆற்றில் ஆய்வை முடித்துக் கொண்ட நீதிபதிகள் தற்போது ராமையன்பட்டியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.