கோவையில் பெற்ற மகளை தாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கருமத்தம்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் கணவரை பிரிந்து வாழும் நிலையில், விபச்சாரம் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று அவரது கள்ளக்காதலன் பிரேம் நசீர் யோசனையால் தன்னுடைய 20 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணை மீட்ட போலீஸார் ராசாத்தி மற்றும் பிரேம் நசீர் ஆகியோரை கைது செய்தனர்.