நெல்லை பாளையங்கோட்டையில் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சீவலப்பேரி கல்லறை தோட்டத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் கல்லறையை சுத்தம் செய்து கல்லறைக்கு வர்ணம் பூசி கல்லறை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவியும் அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை படைத்தும் அஞ்சலி செலுத்தினர். சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.