திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் இன்று மாஞ்சோலை தொழிலாளர்களுடன் எஸ்டிபிஐ கட்சி மற்றும் மாஞ்சோலை மக்கள் வாழ்வுரிமை மீட்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாஞ்சோலை பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செய்து தர வலியுறுத்தி வருகின்ற 11ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும்
போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.