நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் உடையார்பட்டியில் தனியார் மருத்துவமனையில் பாதாள சாக்கடை இணைப்பு முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா இன்று (நவம்பர் 12) நேரில் ஆய்வு மேற்கொண்டார். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக சமீபத்தில் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்த நிலையில் மாநகராட்சி ஆணையர் இந்த அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.