தமிழக ஆளுநர் ஆர்என். ரவி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகபட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இன்று சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் ஆளுநர் சென்ற சாலையான நெல்லை தாலுகா அலுவலகம் அருகே மர்ம கார் ஒன்று நீண்ட நேரம் நின்றுள்ளது. எனவே வெடிகுண்டு நிபுணர்கள் அந்த காரை மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டதில் மர்ம பொருள் ஏதும் இல்லை. இருப்பினும் காரின் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.