நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் தனி வட்டாட்சியர் வாகனம் ஒன்று பழுதாகி நடுரோட்டிலேயே சுமார் 4 மணி நேரமாக நின்றதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக கொக்கிரகுளம் மேலப்பாளையம் சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். அரசு அதிகாரி வாகனம் நடுவழியில் ரிப்பேர் ஆகி நின்றது பரபரப்பு ஏற்படுத்தியது.