நெல்லையில் கனமழை எதிரொலி; நம்பி கோயிலுக்கு செல்ல தடை
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர் நிலைகளில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. குறிப்பாக மணிமுத்தாறு அருவி களக்காடு தலையணை போன்ற இடங்களில் இன்று (நவம்பர் 15) அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக களக்காடு திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று வனத்துறை தடை விதித்துள்ளது.