நெல்லை மாநகராட்சி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முழு உருவ சிலை அமைக்க நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று நாதக நிர்வாகி மாரிசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த நிலையில் சிலை அமைக்கும் முடிவை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.