அனைத்து பள்ளியிலும் "மாணவர் மனசு" என்ற புகார்ப் பெட்டி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் போக்சோ சட்டம் குறித்து ஆலோசனைக் குழு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் என்.சி.சி., விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.