தஞ்சை: மரங்கள் அப்புறப்படுத்தப்படாததால் விபத்து ஏற்படும் அவலம்..
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பூம்புகார் செல்லக்கூடிய சாலை புராதண பழமையான சாலையாகும், குறிப்பாக கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லக்கூடிய கல்லணை பூம்புகார் சாலையில் தற்போது சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பழமையான மரங்கள் முற்றிலுமாக அப்புறப்படுத்த வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. நிழல் தரக்கூடிய வகையில் சாலையின் இருபுறமும் இருந்துவந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அகற்றும் பணியானது தற்போது நடந்து வருகிறது. குறிப்பாக திருமங்கலக்குடி, சூரியனார் கோயில், கஞ்சனூர், மணலூர், துகிலி திருக்கோடிக்காவல் மகாராஜபுரம் கதிராமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டப்பட்ட மரங்கள் அங்கேயே போடப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும், வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்று ஏற்பாடாக புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.