மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருச்செம்பள்ளி மற்றும் காலகஸ்திநாதபுரம் கிராமங்களில் சுமார் 370 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பல விவசாய நிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக புகையான் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் பெரும் அளவு பாதிக்க நேரிடும் என்பதால் உரிய நிவாரணம் அல்லது பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.