புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் உள்ள பிரபலமான கோயிலுக்குள் நேற்று (ஜன. 04) பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கும் இங்கும் நடந்த அவர்கள் கோயிலுக்குள் இருந்த பித்தளை பூஜை பொருட்களை மூட்டையாக கட்டி திருடிச் சென்றார்கள். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.