மின்சார வாகனம் பிரிவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அபய் கரண்டிகரின் கீழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) இந்த முயற்சியை வழிநடத்துகிறது. உள்நாட்டில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக ரூ. 14,000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.