திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையம் ஊராட்சியில், கே.எஸ்.கே. அறக்கட்டளை சார்பில், 50 பெண் குழந்தைகளை, மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்கும் விழா நேற்று (ஜன. 04) நடந்தது. அறக்கட்டளை தலைவர் சம்பத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட 50 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், 250 ரூபாய் செலுத்துவதற்கான ஆணைகளை வழங்கினார்.