திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

திருவிடைமருதூா்: மனைவியை தாக்கிய கணவா் கைது

திருவிடைமருதூா் அருகே உள்ள மாங்குடி பிரதானசாலை புதுத்தெருவைச் சோ்ந்தவா் ரவி மகன் ராஜமணிகண்டன்(24). கட்டடத் தொழிலாளி. இவருக்கும் சரண்யா(23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜமணிகண்டன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். அப்போது, சரண்யாவை அடித்து துன்புறுத்தி பெற்றோா் வீட்டுக்குச் சென்று வரட்சனையாக நகை, பணம் வாங்கி வருமாறு கூறுவாராம். இதுகுறித்து சரண்யா திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செப். 30-இல் புகாா் செய்தாா். புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் துா்கா ராஜமணிகண்டன் மீது வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்து ராஜமணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా