திமுக எம்.பி, கனிமொழி கருணாநிதி இன்று (ஜன.5) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், சென்னையில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் அனைவரின் காவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில், கனிமொழி எம்.பி., ஆசிரியராகவும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நாதக சீமான், தவெக விஜய், பாஜக அண்ணாமலை ஆகியோர் மாணவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு கனிமொழி, அரசியல் பாடம் எடுப்பதாக அதன் போஸ்டரில் வாசகம் இடம்பெற்றுள்ளது.