கலைஞர் உரிமைத் தொகை நிபந்தனைகளுக்கு உட்படாமல் யாரேனும் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். சொந்த பயன்பாடுக்காக கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை வைத்திருக்கக்கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒரே வீட்டில் இருவர் உரிமைத்தொகை பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளை மீறி யாரேனும் உரிமைத்தொகை பெற்றால், https://kmut.tn.gov.in/public_complaints.html இதில் புகார் அளிக்கலாம்.