தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தில் தினமும் ஆதார் சேவை
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தில் தினமும் ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் தலைமை தபால்நிலையத்தில் ஆதார் சேவை தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. என தஞ்சாவூர் அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையில் பெயர், முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம், மண்ணார்குடி தலைமை அஞ்சலகம் மற்றும் பாபாநாசம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் சேவையானது பொதுமக்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை தோறும் தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள மேற்கண்ட அனைத்து தலைமை அஞ்சலகத்திலும் செயல்படுகிறது. இந்த ஆதார் சேவையில் புதிய ஆதார் அட்டை, பெயர் திருத்தம், முகவரி திருத்தம் போன்ற ஆதார் சேவைகளை மக்கள் பெற்று கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.