பட்டுக்கோட்டையில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி

61பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை சார்பில் மாலை 5 மணியளவில் போதைப் பொருள்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி, கிளை நிர்வாகிகள் பாரூக், ஜுபைர், அலாவுதீன், கான், , சாகுல் மற்றும் சித்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பேரணி வடசேரி ஆத்துப்பாலத்தில் துவங்கி மணிக்கூண்டில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் மாநிலச் செயலாளர். சபீர் அலி இவ்வுரையில் போதை பழக்கத்தால் இளைஞர்கள் அடையும் பாதிப்பு, பூரண மது ஒழிப்பின் அவசியம் குறித்து பேசினார். போதை பொருட்கள் அதிகம் நடமாடும் தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும்
பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது, இப்பொறுப்பை உணர்ந்து தமிழக அரசு போதை
பொருள் ஒழிப்பில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேசினார்.
இப்பேரணியில் சிறுவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட ஐநூறுக்கும் அதிகமான மக்கள் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான போதை பொருள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். நிறைவாக கிளைத் தலைவர் முகமது பாரூக் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி