பட்டுக்கோட்டை மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு மற்றும் கீழக்காடு ஆகிய பகுதிகளில் ஐயர் தோப்பு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் இடத்தில் அரசு அனு மதி பெற்று மண்குவாரி அமைத்து அதிலிருந்து மண் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறி பெண்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட மணல் குவாரிக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் மண் எடுப்பதை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி