உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக் கூடுதல் தலைமைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்.
தஞ்சாவூர் அருகே மருங்குளத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
புதிய கொள்முதல் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இதில், குவிண்டாலுக்கு சன்ன ரக நெல்லுக்கு ரூ. 2 ஆயிரத்து 450}ம், பொது ரக நெல்லுக்கு ரூ. 2 ஆயிரத்து 405}ம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு, 83 ஆயிரத்து 152 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட நிகழாண்டு இதே காலகட்டத்தில் 12 ஆயிரம் டன் அதிகம்.
தமிழ்நாட்டில் கடந்த கொள்முதல் ஆண்டில் (செப்டம்பர் - ஆகஸ்ட்) 34.
96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரத்து 74 கோடி வழங்கப்பட்டது. கடந்த கொள்முதல் ஆண்டில் 1. 69 லட்சம் விவசாயிகளிடமிருந்து 7. 89 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழ் கொள்முதல் பருவத்தில் இதுவரை 7 ஆயிரத்து 543 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் நிகழ் நிதியாண்டில் ரூ. 16 ஆயிரத்து 500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 4. 91 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 4 ஆயிரத்து 405 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது"என்றார்.