தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்

78பார்த்தது
பட்டுக்கோட்டை அருகே பூவாளூர் கிராமத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தாயமங்கலம்
ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு இன்று 15, 000 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது - வளையல் அலங்காரத்தை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பார்த்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பூவாளூர் கிராமத்தில் எழுந்தருளி
அருள்பாலித்துவரும் தாயமங்கலம்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று
ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு
15, 000 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்
நடத்தப்பட்டு பின்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வளையல் அலங்காரத்தை பார்ப்பதற்காக பூவாளூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வளையல் அலங்காரத்தை பார்த்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். அதேபோல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் ஸ்ரீ பால் வேம்பு கருமாரியம்மன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கருமாரியம்மனை வழிபட்டுச் சென்றனர். ஏராளமான பெண்கள் எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி