தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும்

57பார்த்தது
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் (செப்டம்பர் 16, 17) வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் இயல்பைவிட 7°F அதிகரிக்கும் எனவும், சென்னையில் 102°F வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.