பேராவூரணியில் சைவ திருமுறைகள் நால்வர் வீதி உலா

81பார்த்தது
பேராவூரணியில் சைவ சித்தாந்த சைவ திருமுறைகள், சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முதல் ஆண்டு நால்வர் திருவீதி உலா நடைபெற்றது. பேராவூரணியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உருவச்சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நால்வர்களின் சிலைகள் வைக்கப்பட்டு திருவீதி உலாவை, அசோக்குமார் எம்எல்ஏ வாழ்த்தி தொடங்கி வைத்தார். திருவீதி உலா மாலை 3 மணிக்கு பேராவூரணி தனியார் மண்டபத்தில் இருந்து தொடங்கி முதன்மை சாலை, சேதுபாவாசத்திரம் சாலை வழியாக சென்று தாலுகா அலுவலகம் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. இதில் 300-க்கும்மேற்பட்ட சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி