உறுப்புகளை தானம் அளித்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை

76பார்த்தது
பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்து உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சார்பில் கோட்டாட்சியர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள செண்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பவரின் மகன் மணிமாறன் (வயது 25)
இவர் ஆக. 10 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தபோது விபத்தில் காயமடைந்தார்.
உடனே அவர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மணிமாறனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் இவரது
உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அதன் பிறகு மணிமாறனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே மணிமாறன் உடலுக்கு அரசு சார்பில் பட்டுக்கோட்டை
கோட்டாட்சியர் பொறுப்பு சங்கர் மற்றும் வட்டாட்சியர் சுகுமார் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராக உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி