குஜராத்தில் இன்று செப்டம்பர் 16 பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் 'வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் குளிர்சாதன வசிதியுடன் கூடிய பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா சேவையாக இவ்வகை ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அகமதாபாத் - புஜ் இடையே 360 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படும் இந்த ரயிலின் கட்டணம் ரு.455 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.