புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் - அபராதம்

61பார்த்தது
பேராவூரணி மற்றும் ரெட்டவயல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மற்றும் விநியோகம் செய்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த ரெட்டவயலில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை, கடந்த 3 தினங்களுக்கு முன்பு பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலைப் பொருட்களை பொருட்கள் விநியோகம் செய்ததாக பேராவூரணியைச் சேர்ந்த ஒரு கடையிலும் என மொத்தம் 32 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.  


இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா உத்தரவின் பேரில், பேராவூரணி உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன், மேற்பார்வையாளர்கள் அடைக்கலம், ஜான்சன் ஆகியோர், பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி, பயிற்சி உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலையில், இரண்டு கடைகளையும் 
14 நாட்கள் தற்காலிகமாக 
பூட்டி சீல் வைத்தனர்.  
மேலும், இரண்டு கடைகளுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.