கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நிஷா என்பவர், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டாம் என்று தனது ஸ்கூட்டரில் பெரிய போர்டு ஒன்றை தொங்கவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தனது எக்ஸ் தள பதிவில், "ஓலா ஒரு பயனற்ற இருசக்கர வாகனம். நீங்கள் அதை வாங்கினால், அது உங்கள் வாழ்க்கையை கடினமாக்கும். தயவுசெய்து ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்காதீர்கள். "விரக்தியடைந்த ஓலா வாடிக்கையாளர்" என்று போர்டில் கையெழுத்திட்டு உள்ளார்.