பட்டுக்கோட்டையில் பள்ளியில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் , டாக்டர் அய்யசாமி குழந்தைகள் மருத்துமனை, பள்ளியுடன் இணைந்து உலக தாய்ப்பால் வார விழா
நடைபெற்றது
நிகழ்விற்கு பள்ளி தாளாளர் ஜெசிந்தா மேரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை மாசில்லா மேரி. மருத்துவர் அய்யாசாமி குழந்தைகள் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ராம்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா, தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் செல்வகுமார், தஞ்சாவூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் மருத்துவர் அன்பழகன் கலந்து கொண்டு தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றிச் சிறப்பித்தனர்.
நிகழ்வின் கருப்பொருளைச் சார்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் புத்தகம் வெளியிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா கௌரவிக்கப்பட்டார். பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளிப்பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அனிதா ஜோசப், , ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.