
சிவகங்கை: 11 வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்த அமைச்சர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தார். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டையிருப்பு ஊராட்சிக்குட்பட்ட காக்காளிப்பட்டி கிராமத்தில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 47. 96 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களும், திருவுடையார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவுடையார்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22ன் கீழ் ரூ. 07. 00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினையும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 11 வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ. 206. 10 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.