சிவகங்கை அருகே உள்ள இலுப்பக்குடியில் உள்ள இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 455 பேருக்கு மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா அவர்கள், தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, மத்திய அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்: டி ஐ ஜி அச்சல் சர்மா கமாண்டிங் அதிகாரி சுனில் குமார் தபால் துறை மதுரை உதவிய இயக்குனர் பொன்னையா தேனி கனரா வங்கி மண்டல மேலாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.