சிவகங்கை: பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

55பார்த்தது
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட காந்தி வீதி மற்றும் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 

தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 43 இலட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் வைக்கும் அறை கட்டிட பணி, 15வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ. 116.98 இலட்சம் மதிப்பீட்டில் LCV மற்றும் BOV வாகனங்கள் வாங்குதல், நகர்ப்புற காடுகள் மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணிகளும், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 208 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளும், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பூங்கா அமைக்கும் பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 31.20 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகளும், 2023-24ஆம் நிதியாண்டிற்கான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 554 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் மற்றும் புதிதாக தினசரி சந்தை அமைக்கும் பணிகளும், 15வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ. 123 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் மற்றும் வார்டு எண் 18இல் நகர்ப்புற சுகாதார மைய கட்டிடம் அமைக்கும் பணிகளும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரூ. 55 இலட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளுடன் கூடிய பாதுகாவலர் தங்குவதற்கான கட்டிடம் கட்டும் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி