அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தன்று, பிரியாணி கடையில் விற்பனை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு ஞானசேகரன் சென்றுள்ளார். அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்து மிரட்டி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.