சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்று 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது முதலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அவருக்கு வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டது. அதன் பின்பு மறு வாக்கு எண்ணிக்கையில் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றம் தேவி மாங்குடி வெற்றி பெறுவார் என்று அறிவித்தது. தேவி மாங்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி ஐயப்பன் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கை சிவகங்கை நீதிமன்றத்தில் நாடி பரிகாரம் பெறலாம் என்று உத்தரவிட்டது. அவருக்கு கடந்த மாதம் இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி பெறுவார் என்று சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து தேவி மாங்குடி மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினார். சிவகங்கை நீதிமன்றம் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி பெறுவார் என்று அறிவித்ததை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி ஐயப்பன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து தேவி மாங்குடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தேவி மாங்குடி வெற்றி பெறுவார் என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.