நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று, ஒரு வீட்டின் முன் இருந்த வளர்ப்பு நாயை துரத்தி, துரத்தி வேட்டையாட முயன்றது. நாய் குரைத்துக் கொண்டே சிறுத்தையிடம் இருந்து லாவகமாக கண் இமைக்கும் நேரத்தில் தப்பியது. சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் மின் விளக்கை போட்டதும், செடிகளிடையே மறைந்தபடி சிறுத்தை தப்பியது. சிறுத்தையிடம் சிக்கிய நாய் உயிருக்கு போராடிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.