சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது: பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அம்பேத்கர் பிறந்த இடம் , வாழ்ந்த இடம் என லண்டன் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நினைவுச் சின்னங்களை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார் மேலும் அம்பேத்கரை சிறுமைப்படுத்திய சிறுநரி கூட்டம் காங்கிரஸ் என்று விமர்சனம் செய்தார். தமிழக அரசு அம்பேத்கரை வைத்து நாடகம் ஆடுகிறது அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால் மூன்றரை வருட தமிழக அரசின் திட்டங்களில் ஒரு திட்டத்திற்காவது அம்பேத்கர் பெயரை வைத்துள்ளார்களா? முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லி அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ரூ 944 கோடி தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது சுமார் 2 லட்சம் வீடுகள் என்றால் வீட்டுக்கு ரூ45 ஆயிரம் கொடுக்க வேண்டும் ஆனால் ரூ 2000 மட்டுமே கொடுத்துள்ளார்கள் இது யாரை? ஏமாற்றுவதற்கு என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்து மத்திய அரசு நல்ல அறிவிப்பை வெளியிடும் அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்