சிவகங்கை மாவட்டம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் திருப்பத்தூர் வட்டார பகுதிகளில் இயங்கி வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மேம்பாட்டு வசதிக்கென வேளாண் விளை பொருட்களுக்கான சூரிய உலர்த்துவதற்கான கூடம் மற்றும் கடப்பா கல் பொருத்தப்பட்டுள்ள களம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விவசாய பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசுகையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலான பணிகளை மேற்கொண்டு வருவது நமது மாவட்டத்திற்கு சிறப்பிற்குரியதாகும். குறிப்பாக விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை, மதிப்புக்கூட்டுப் பொருட்களாக உருவாக்கி, அதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் குறிப்பாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சார்ந்த பங்குதாரர்களுக்கு, இலாபத்தினை முறையாக வழங்கி, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து இந்நிறுவனத்தில் e-Nam மூலம் இதுவரை ரூ 2கோடிக்கு வணிகம் மேற்கொள்ளப்பட்டு, ரூ. 12 இலட்சம் வரை நிகர லாபம் அடைந்துள்ளது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற இலாபத்தில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகையாக ஒரு நபருக்கு ரூ. 200 வீதம் 1000 பங்குதாரர்களுக்கு ரூ 2 இலட்சம் வழங்கினார்.