திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்

66பார்த்தது
அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளின் தொடக்க நிகழ்வாக கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலகத்துறை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அய்யன் திருவள்ளுவர் உருவப்படத்தினை திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் திருஞானசம்பந்தம், சிவகங்கை மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார், நூலக கண்காணிப்பாளர் சுவாமிநாதன், வாசகர் வட்ட தலைவர் அன்புதுரை, நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர் குழுவினர் ஈஸ்வரன், முத்து, கண்ணன், ரமேஷ் கண்ணன், ஆசிரியர் கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி