சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி முகாம் கூட்ட அரங்கில் தேவகோட்டை வட்டார சட்டப் பணிகள் குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேவகோட்டை வட்டார சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி கலைநிலா தலைமையேற்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். முன்னதாக வட்டார சட்ட பணிகள் குழு முதன்மை நிர்வாக உதவியாளர் மணிமேகலை வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
காரைக்குடி வழக்கறிஞர் மணிமேகலை, மாவட்ட பாதுகாப்பு அலுவலர் (ம) சமூக நலத்துறை ஈஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். வழக்கறிஞர்கள் கௌசல்யா, பிரவீனா, ஞானசுபதர்ஷினி, ஜெயமலி ஆகியோர் பெண்களைப் போற்றும் தேசமே விழிப்புணர்வு பாடலை பாடினர். விடியல் என்ஜிஓ மகளிர் மேம்பாட்டுக் குழு சார்பாக கைபேசினால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து நாடகமாக விளக்க உரையாற்றினர். வழக்கறிஞர் தர்ஷினி சாதனைப் பெண்கள் என்னும் கவிதை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த தன்னார்வலர் நாகேந்திரன் நன்றி கூறினார்.