சிவகங்கை - Sivaganga

சிவகங்கை: உபரி நீர் திறப்பால் பாலம் உடைந்தது சேதம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்வாஊரணி பகுதியில் காரைக்குடி அதலைக் கண்மாய் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அதலைக்கண்மாய் தற்போது நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வா ஊரணி பகுதியில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு செல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் நிதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பாலத்தில் தற்போது பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால் அடிப்பகுதியில் போடப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தும் மிகவும் சேதம் அடைந்து பாலம் வலுவிழந்து உள்ளது. இதனால் ஆட்டோ கார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் பாலம் உடைந்து விழும் நிலையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே இப்பாலத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


சிவகங்கை
கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!
Oct 18, 2024, 16:10 IST/

கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!

Oct 18, 2024, 16:10 IST
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் தவிர்க்கப்பட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.