அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலா டுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்கள் உள்ளன. இதில் 61 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளின் பாதுகாப்பு பணிகளுக்காக முன்னாள் படை வீரர்களை காவலாளிகளாக நியமித்தனர் இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென காவலாளியாக பணிபுரிந்த 84 பேரையும் அரசு போக்குவரத்துக் கழகம் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது
கடந்த 2023 அக். 15-ல் பணியில் சேர்ந்துள்ளனர் மாதம் ரூ. 21, 500 வழங்கப்பட்டுள்ளது
திடீரென நீக்கியதற்கு முன்னாள் படைவீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் ஆட்சியரகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்தித்து மனு அளித்தனர்.